உங்களுடைய களைப் பயிர்களைக் கண்டு பிடியுங்கள் !

பிரகியாரியா ரெப்டன்ஸ்

டாக்டிலோக்டீனியம் ஈஜிப்டியம்

டிஜிட்டாரியா சாங்குனாலிஸ்

எச்சினோக்ளோவா கொலோனா

எச்சினோக்ளோவா கிரஸ் கல்லி

எச்சினோக்ளோவா கிளாப்ரெசென்ஸ்

எலியூசின் இன்டிகா

இராகுரோடிஸ் டெனெல்லா

லெப்டோக்ளோவா சினென்சிஸ்

பஸ்பலும் டிஸ்டிசும்

ஆல்டர்நந்தேரா பிலோக்ஸெராய்டஸ்

அம்மன்னியா பச்சிஃபெரா

பெர்ஜியா கேபென்சிஸ்

கேசுலியா ஆக்சிலரீஸ்

செலோசியா அர்ஜென்டியா

கம்மெலினா டிஃபியூசா

சியானோடிஸ் ஆக்சிலரீஸ்

எக்லிப்டா ஆல்பா

லுட்வீஜியா பர்விஃபுளோரா

லுட்வீஜியா ஆக்டோவால்விஸ்

மோனோகோரியா வஜினாலிஸ்

மார்சீலியா குவாட்ரிஃபோலியா

சஜிட்டாரியா குவாயனென்சிஸ்

ஸ்பெனோகிளியா ஜிலானிகா

சைப்பெருஸ் டிஃபார்மிஸ்

சைப்பெருஸ் ஐரியா

ஃபிம்பிரிஸ்டைலிஸ் மிலியாசியா

ஸ்கிரிபுஸ் ஜூன்காய்டஸ்

ஸ்கிரிபுஸ் ராய்லேய்
-
பிரகியாரியா ரெப்டன்ஸ்
விவரிப்பு: பிரகியாரியா ரெப்டன்ஸ் என்பது ஒரு சிறு வருடாந்திர மூலிகைச்செடியாகும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தெற்கு ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் பல்வேறு தீவுகளில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் இச்செடி வளர்கிறது. இது ஒரு பல்லாண்டுப் புல்வகை அல்லது வருடாந்திரப் புல்வகையாகும். பொதுவாக அதிகமாக கிளைவிட்டு, தரையில் படர்ந்து, நுனிநிமிர்ந்து, கணுக்களில் வேர்விட்டு வளரக்கூடியது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தச் செடி மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய துணைக்கண்டம், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சென்றடைந்திருக்கிறது. உள்ளூர் பெயர்: போரே ஹூல்லு (கன்னடம்), நண்டுக்கால் புல் (தமிழ்), நடின் (பஞ்சாபி), வாக்நாகி (மராத்தி), கல்லியு (குஜராத்தி), கிரெப் காஸ் / பாரா காஸ் (ஹிந்தி), பாரா காஸ் (பெங்காளி), எடுருவாகுலா காடி (தெலுங்கு) -
டாக்டிலோக்டீனியம் ஈஜிப்டியம்
விவரிப்பு: டாக்டிலோக்டீனியம் ஈஜிப்டியம் என்பது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஆனால் உலகளாவிய அளவில் பரவியிருக்கும் பொவேசி குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். ஈரமான இடங்களில் அடர் மண்ணில்தான் இந்தச் செடி பெரும்பாலும் வளர்கிறது. இது ஒரு மெல்லியது முதல் ஓரளவு உறுதியான ஆண்டுதோறும் வளரும் செடியாகும். வயர் போன்ற தண்டு உண்டு அது வளையும். அதன் கீழ் கணுக்களில் வேர் விட்டு வளரக்கூடியது. உள்ளூர் பெயர்: கொனானா டேல் ஹூல்லு (கன்னடம்), நட்சத்திர காடி / கணுகா காடி (தெலுங்கு), காக்காக்கல் புல் (தமிழ்), ஹர்கீம் (மராத்தி), மாக்டா (பஞ்சாபி), மாக்டா / சவாய் (ஹிந்தி), சொக்காடியு (குஜராத்தி), மாகோர் ஜெய்ல் (பெங்காளி) -
டிஜிட்டாரியா சாங்குனாலிஸ்
விவரிப்பு: டிஜிட்டாரியா சாங்குனாலிஸ் என்பது உலகெங்கும் ஒரு பொதுவான களையாக நன்கு அறியப்படும் டிஜிட்டாரியா இனத்தைச் சேர்ந்த புல்செடியாகும். இது ஒரு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது, இதன் விதைகள் உண்ணத்தக்கவை, ஜெர்மனியில் குறிப்பாக போலந்தில் சாகுபடியும் செய்யப்படுகிறது ஒரு தானியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே இது போலந்து தினை என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் பெயர்: ஹோம்பலே ஹூல்லு (கன்னடம்), அரிசிப் புல் (தமிழ்), , தோக்காரி (பெங்காளி) வாக்நாகி (மராத்தி), பர்ஷ் காஸ் / சின்யாரி (ஹிந்தி), நடின் (பஞ்சாபி), ஆரோடரோ (குஜராத்தி), சிப்பாரா கட்டி (தெலுங்கு) -
எச்சினோக்ளோவா கொலோனா
விவரிப்பு: எச்சினோக்ளோவா கொலோனா என்பது ஒரு வருடாந்திரப் புல். பல கோடைகாலப் பயிர்களிலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் காய்கறிப் பயிர்களிலும் இதுதான் உலகின் மிக அபாயகரமான களையாக அறியப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில், இது 1814-ல் கியூபாவில் முதலில் வெளியிடப்பட்டது. வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தப் புல்வகை தோன்றியிருக்கிறது. உள்ளூர் பெயர்: காடு ஹரக்கா (கன்னடம்), ஒத்தகட்டி / டோங்கா வாரி (தெலுங்கு), சாமோ (குஜராத்தி), குதிரைவாளி (தமிழ்), பக்கார்ட் (மராத்தி), சமக் / சவன் (ஹிந்தி), ஸ்வங்கி (பஞ்சாபி), பஹாரி ஷாமா / கெட்டி ஷாமா (பெங்காளி) -
எச்சினோக்ளோவா கிரஸ் கல்லி
விவரிப்பு: வெப்பமண்டல ஆசியாவில் தோன்றிய இந்த எச்சினோக்ளோவா கிரஸ் கல்லி முன்னர் ஒருவகை பானிக்கம் புல் என வகைப்படுத்தப்பட்டது. இதன் மேம்பட்ட உயிரியல் மற்றும் மிகச்சிறந்த சூழ்நிலைத் தகவமைப்பு காரணமாக உலகிலேயே மிகவும் கொடுமையான களையாகக் கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் இது பரவி, எண்ணிலடங்கா பயிர்ச் செயல்முறைகளைத் தாக்குகிறது. உள்ளூர் பெயர்: சிம்பாகனா ஹூல்லு (கன்னடம்), பெட்டா விண்டு (தெலுங்கு), கவட் (மராத்தி), நெல்மராட்டிi (தமிழ்), சமக் (ஹிந்தி), சாமோ (குஜராத்தி), ஸ்வங்க் (பஞ்சாபி), சவா / ஸ்வங்க் (ஹிந்தி), டேஷி ஷாமா (பெங்காளி), -
எச்சினோக்ளோவா கிளாப்ரெசென்ஸ்
விவரிப்பு: கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால் எச்சினோக்ளோவா கிளாப்ரெசென்ஸ் என்பது நெல்லுடன் அதிகமாகப் போட்டியிடும் ஒரு களையாகிவிடும். நேரடியாக நெல் விதைக்கும்போது இந்தக் களையின் போட்டி இயல்பு அதிகமாகிறது. களையின் விதை முளைத்தலைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றிய மேம்பட்ட புரிதல் தேவைப்படுகிறது. நேரடியாக நெல் விதைக்கும்போது ஒருங்கிணைந்த களை மேலாண்மையின் ஒரு அங்கமாக இதைப் பயன்படுத்த முடியும். உள்ளூர் பெயர்: கண்டு ஆட்டா (கன்னடம்), ஒத்தகட்டி (தெலுங்கு), கவட் (மராத்தி), ஸ்வங்க் (பஞ்சாபி), சாவா / ஸ்வங்க் (ஹிந்தி), ஸ்வங்க் (பஞ்சாபி), புரா ஷாமா (பெங்காளி), சாமோ (குஜராத்தி), குதிரைவாளி (தமிழ்) -
எலியூசின் இன்டிகா
விவரிப்பு: எலியூசின் இன்டிகா எனப்படும் இந்திய வாத்துப் புல், முற்றப்-புல், வாத்துப் புல், வயர் புல் அல்லது காக்கைக்கால் புல் என்பது பொவாசியே குடும்பப் புல்லில் ஒன்று. இது ஒரு சிறிய வருடாந்திரம் புல், உலகின் வெப்பமான பகுதிகள் முழுவதும் அதாவது 50 டிகிரி அட்சரேகைப் பகுதிகளில் பரவியிருக்கிறது சில பகுதிகளில் இது ஒரு படையெடுப்பெடுக்கும் இனமாக உள்ளது. உள்ளூர் பெயர்: ஹக்கி காலினா ஹூல்லு (கன்னடம்), திப்பா ராகி (தெலுங்கு, தமிழ்), ரன்னசானி (மராத்தி), சொக்காலியு (குஜராத்தி), கோடோ (ஹிந்தி), பின்னா சாலா / சப்ரா காஸ் (பெங்காளி) -
இராகுரோடிஸ் டெனெல்லா
விவரிப்பு: இராகுரோடிஸ் டெனெல்லா என்பது பொதுவாக 50 செமி உயரத்திற்கு மேல் போகாத பல்வேறு அளவில் உள்ள ஒரு சிறு நெருக்கமாக குஞ்சம்போல் உள்ள வருடாந்திர புல்லாகும். இந்த மென்மையான கற்றையான வருடாந்திர புல் தரிசுப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும், சாகுபடி செய்யும் நிலங்களிலும் செனகலிலிருந்து மேற்கு காமரூன் வரையும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா முழுவதும் வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படுகிறது. உள்ளூர் பெயர்: சின்ன கரிக்கா கட்டி (தெலுங்கு), சிமான் சரா (மராத்தி), கபுதார் தானா, சிடியா தானா (ஹிந்தி), பூம்ஷி (குஜராத்தி), சாடா ஃபுல்கா (பெங்காளி) , கபுதார் தானா (பஞ்சாபி) -
லெப்டோக்ளோவா சினென்சிஸ்
விவரிப்பு: லெப்டோக்ளோவா சினென்சிஸ் என்பது ஒரு பொதுவான நெல் களை. ஆஸ்திரேலியாவில் வளராவிட்டாலும், புதிய சவுத் வேல்ஸ், குயின்ஸ்லான்டு மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா, இலங்கை, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற ஐரோப்பியா அல்லாத நாடுகளிலிருந்து தற்செயலாக அறிமுகம் செய்யப்பட்டதாகவே இந்த விந்தையான களை இருந்திருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் ஓரளவு தண்ணீர் உள்ள சூழல்களில் குஞ்சம்போல் வளரும் இந்தக் களை ஆக்கிரமிக்கக்கூடியதாக அறியப்படுகிறது. உள்ளூர் பெயர்: புச்சிகபுல்லாலா கட்டி (தெலுங்கு), பூல் ஜத்து(ஹிந்தி, பஞ்சாபி), சார் கான்டா (பெங்காளி), சீலைப்புல் (தமிழ்) -
பஸ்பலும் டிஸ்டிசும்
விவரிப்பு: பஸ்பலும் டிஸ்டிசும்-ன் பிறப்பிடப் பரப்பு இன்னும் புதிராகவே உள்ளது. ஏனெனில் இது பெரும்பான்மையான கண்டங்களிலும் பெரும்பான்மையான இடங்களிலும் நீண்ட காலமாகவே இருக்கிறது. இது நிச்சயமாக அறிமுகப்படுத்தப்பட்ட இனமாகும். இது நீண்டகாலம் பிண்ணிப் பிணைந்து வளரக்கூடியது. வேர்த்தண்டு மற்றும் ஓடுதண்டுகள் வழியாக பரவுகிறது. இது தரைபடர் நுனி மேலெழும் தண்டு அல்லது 60 செமீ உயரம்வரை நிமிர்ந்து வளரும் களையாகும். உள்ளூர் பெயர்: அரிகேலு (தெலுங்கு), கரிலாங்கன்னி (தமிழ்), பாடா துப்டா (ஹிந்தி), பாடி தூப் (பஞ்சாபி), கிட்லா காஷ் (பெங்காளி) -
ஆல்டர்நந்தேரா பிலோக்ஸெராய்டஸ்
விவரிப்பு: ஆல்டர்நந்தேரா பிலோக்ஸெராய்டஸ் என்பது அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே உட்பட்ட தென் அமெரிக்காவின் மிதவெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இனமாகும். இது ஒரு காலத்தில் தென் அமெரிக்காவின் பரானா ஆற்றுப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்டது. ஆனால், இப்போது அமெரிக்கா, நியூசிலாந்து, சீனா, இந்தியா போன்ற 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உள்ளூர் பெயர்: மிர்ஜா முல்லு (கன்னடம்), முல் பொன்னாங்கன்னி (தமிழ்), குடை சாக் (ஹிந்தி), பானி வாலி புட்டி (பஞ்சாபி), காக்கி / புலுயி (குஜராத்தி), மலஞ்சா சாக் (பெங்காளி) -
அம்மன்னியா பச்சிஃபெரா
விவரிப்பு: அம்மன்னியா பச்சிஃபெரா என்பது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஸ்பெயினில் இது இயல்புப்படுத்தப்பட்டுள்ளது. இரு ஒரு வருடாந்திர மற்றும் குறுஞ்செடி வகை களையாகும். கடல் மட்டத்திலிருந்து குறுகிய உயரமே உள்ள சதுப்புநிலங்களிலும், சேற்றிலும், நெல் வயல்களிலும், நீர்க் கால்வாய்களிலும் அதிகமாகக் காணப்படும். உள்ளூர் பெயர்: அக்னிவெண்ட்ரபாக்கு (தெலுங்கு), தண்டு பூண்டு (தமிழ்), அஜின் பூட்டி (மராத்தி), மச்சயன் பான் (ஹிந்தி), பூல் வாலி புட்டி, (பஞ்சாபி), பான் மரிச் (பெங்காளி) -
பெர்ஜியா கேபென்சிஸ்
விவரிப்பு: பெர்ஜியா கேபென்சிஸ் என்பது ஒரு வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல தாவரமாகும். சில இடங்களில் நீர்த்தாவரமாகவும் உள்ளது. இது ஒரு பல்லாண்டுப் புல்வகை அல்லது வருடாந்திரப் புல்வகையாகும். 10-35 செமீ வளரும் இதன் தண்டு நிமிர்ந்த நிலையில் இருக்கும், சாற்றுத்தன்மை கொண்டது, சிவப்பாக, அதிக கிளைகொண்டதாக, ஏறுபகுதிகளுடனும், பற்றிப்படருவதாகவும், கணுக்களில் வேர்விடுவதாகவும் இருக்கும். எளிமையான, குறுக்கு மறுக்கு இலையமைவு, குறுகலான நீளவட்ட முதல் ஓரளவு ஈட்டிபோன்ற இலைகள் உள்ளூர் பெயர்: நீரு பாவிலா (தெலுங்கு), கன்னன்கொலை (தமிழ்), சாடா கேஷூரியா (பெங்காளி) -
கேசுலியா ஆக்சிலரீஸ்
விவரிப்பு: கேசுலியா ஆக்சிலரீஸ் என்பது ஒரு ஓரின பூக்கும் தாவரமாகும். இதன் பொதுவான பெயர் இளஞ்சிவப்பு கணுப் பூ. பங்களாதேஷ், பர்மா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையைத் தாயமாகக் கொண்டது. இது சதுப்புப் பகுதிகள், ஈரமான புல்வெளிகள் மற்றும் நீர்ப்பாசனக் குழிகள் போன்ற ஈரமான மற்றும் நீர்வாழிடங்களில் வளரக்கூடியது. உள்ளூர் பெயர்: மக்கா (மராத்தி), எர்ரா கோப்பி, தெல்லா seettஜிலுங்கா (தெலுங்கு), காத்திலா (ஹிந்தி) -
செலோசியா அர்ஜென்டியா
விவரிப்பு: செலோசியா அர்ஜென்டியா என்பது ஒரு நிமிர்ந்த, சுணையற்ற வருடாந்திரப் புல்லாகும். இதன் இலைகள் நேரானதாக அல்லது ஈட்டிவடிவமானதாக இருக்கும். பூ பொதுவாக வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு ஈட்டிவடிவம் கொண்டதாக இருக்கும். இந்தச் செடிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வளருபவை என்பதால், நல்ல சூரிய ஒளியில் நன்கு வளருகின்றன. நீர் தேங்காத இடங்களில் வளரக்கூடியவை. இதன் மலர்கள் 8 வாரங்கள்வரை காயாமல் இருக்கும், இறந்த மலர்களை அகற்றுவதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்கலாம். உள்ளூர் பெயர்: குக்கா (கன்னடம்), கொடிகுட்டுவாகு / குனுகு (தெலுங்கு), சஃபெட் முர்க் (ஹிந்தி), பண்ணைக் கீரை (தமிழ்), குருடு / கோம்ப்டா (மராத்தி), லம்பாடு (குஜராத்தி), மோரோக் ஜூட்டி (பெங்காளி) -
கம்மெலினா டிஃபியூசா
விவரிப்பு: கம்மெலினா டிஃபியூசா வசந்தகாலம் முதல் இலையுதிர் காலம்வரை மலரக்கூடியது, கலக்கமான சூழல்களிலும், ஈரமான இடங்களிலும் காடுகளிலும் அதிகம் காணப்படும். சீனாவில், இந்தச் செடியை காய்ச்சல் தணிப்புமருந்தாகவும் சிறுநீர்ப்பெருக்கியாகவும் மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். பெயிண்டுகளுக்கான நீலச் சாயத்தை இதன் மலர்களிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். நியூ கினியாவில் இதை ஒரு உண்ணக்கூடிய செடியாக குறைந்தது ஒரு வெளியீடு சுட்டிக்காட்டுகிறது. உள்ளூர் பெயர்: ஹிட்டகானி (கன்னடம்), கேனா (மராத்தி), பொக்கான்டா (குஜராத்தி) பொக்கானி / கன்காவுவா (ஹிந்தி), கனுவா (பஞ்சாபி), தோல்சிரா / மனைனா / கனைனாலா (பெங்காளி) -
சியானோடிஸ் ஆக்சிலரீஸ்
விவரிப்பு: சியானோடிஸ் ஆக்சிலரீஸ் என்பது கம்மலினாசியே குடும்பத்தில் உள்ள பல்லாண்டுச் செடி வகையாகும். இந்திய துணைக்கண்டம், தெற்கு சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவைத் தாயமாகக் கொண்டது. மழைக்காலக் காடுகள், அடர்வற்றக் காடுகள், மற்றும் மரங்கள் உள்ள புல்வெளிகளில் வளரக்கூடியது. இந்தியாவில் இதை ஒரு மூலிகையாகவும், பன்றிகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் பெயர்: இகாலி (கன்னடம்), நீர்ப்புல் (தமிழ்), வின்ச்கா (மராத்தி), திவாலியா (ஹிந்தி), நரியேலி பச்சி (குஜராத்தி), ஜோராடான் /உரிடன் (பெங்காளி) -
எக்லிப்டா ஆல்பா
விவரிப்பு: எக்லிப்டா ஆல்பா என்பது பங்களாதேஷின் தரிசு நிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இங்கு, விவசாயிகள் இதை களையாகக் கருதுகிறார்கள். இந்திய துணைக்கண்டத்தின் நாடுகளில் பாரம்பரிய மருத்துவர்களும் பழங்குடியினரும் இந்தச் செடியை மருத்துவ குணம் கொண்டதாகக் கருதுகிறார்கள். இரைப்பைக் கோளாறுகள், சுவாசப்பாதைக் கோளாறுகள் (ஆஸ்துமா உட்பட), காய்ச்சல், முடி இழப்பு மற்றும் முடி செம்பட்டையாதல், கல்லீரல் சீர்கேடுகள் (மஞ்சள்காமாலை உட்பட), சருமப் பிரச்சனைகள், மண்ணீரல் பெரிதாதல், மற்றும் வெட்டுக் காயங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் பெயர்: கரகடா சோப்பு (கன்னடம்), குண்டக்கலாகரா (தெலுங்கு), கல்லுருவி (தமிழ்), மக்கா (மராத்தி), பிரிங்க்ராஜ் (ஹிந்தி), பரங்க்ராஜ் (பஞ்சாபி), கேசுடி (பெங்காளி) -
லுட்வீஜியா பர்விஃபுளோரா
விவரிப்பு: லுட்வீஜியா பர்விஃபுளோரா என்பது மத்திய மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட 82 வகை நீர்த்தாவரங்களின் இனமாகும். பல்வள இயல்புடையது ஆனால், பிரதானமாக வெப்பமண்டலம்சார்ந்தது. தற்போது, தாவரவியலாளர்கள் மற்றும் தாவர வகைப்பாட்டியலாளர்கள் மத்தியில் பல் லுட்வீஜிய இனங்களின் வகைப்பாடுகள் பற்றி அதிக விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க விவசாயத்துறையைச் சேர்ந்த தாவரவியலாளர்கள் மேற்கு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து தாவரங்களின் மரபியல் பகுப்பாய்வை தற்போது நடத்தி வருகிறார்கள். இந்த இனத்தைச் சார்ந்த தாவரங்களை இதனால் நன்கு வகைப்படுத்த முடியும். உள்ளூர் பெயர்: லவங்காக்காயா மோக்கா (தெலுங்கு), நீர்மேல் நெருப்பு (தமிழ்), பானி வாலி கான்ஸ் (பஞ்சாபி), பான் லபாங்கா (பெங்காளி) -
லுட்வீஜியா ஆக்டோவால்விஸ்
விவரிப்பு: லுட்வீஜியா ஆக்டோவால்விஸ் என்பது அதன் முதிர்வு எதிர்ப்புப் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. சில சமயங்களில் இது ஆக்கிரமிக்கக்கூடிய செடியாகக் கருதப்படுகிறது, IUCN இதை மிகக் குறைவாக கவலைப்பட வேண்டிய செடியாகக் கருதுகிறது. வளர்ந்த செடி சராசரியாக ஒரு மீட்டர் இருக்கலாம், இதைவிட உயரமாகவும் வளரலாம். சேற்றில் பாய்போன்று படர்ந்திருக்கும், கீழே உள்ள தரையைத் தொடும்போது கணுக்களில் வேர் விடும், அல்லது தண்ணீரில் மேல்நோக்கி மிதக்கும். இதன் பூக்கள் மஞ்சளாக இருக்கும். பச்சை மற்றும் சிவப்புத் தண்டுகள் இதற்கு உண்டு. உள்ளூர் பெயர்: நீருபக்கலா (தெலுங்கு), பவோல்டி பட்டா /பான் லபாங்கா (பெங்காளி), ஆலா கீரை (தமிழ்) -
மோனோகோரியா வஜினாலிஸ்
விவரிப்பு: மோனோகோரியா வஜினாலிஸ் என்பது இதய வடிவ பிக்கரல் வீடு மற்றும் நீள்வட்ட வடிவ பாண்ட்வீடு உட்பட பல பொதுப் பெயர்களால் அறியப்படும் ஒரு பூக்கும் தாவரமாகும். ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளையும் பசுபிக் தீவுகளையும் தாயகமாகக் கொண்டது. மற்ற இடங்களில் இது ஒரு அறிமுகச் சிறப்பினமாகக் கருதப்படுகிறது. இவை நன்னீர் மற்றும் சதுப்புநில செடிகளாகும், நிமிர்ந்தவையாக அல்லது மிதப்பவையாக உள்ளன. உள்ளூர் பெயர்: பான்பட்டா (ஹிந்தி), நீலோட்பலா (கன்னடம்), நீரோகாஞ்சா (தெலுங்கு) குரு-அன்-குவளை, நீர்த்தாமரை (தமிழ்), -
மார்சீலியா குவாட்ரிஃபோலியா
விவரிப்பு: மார்சீலியா குவாட்ரிஃபோலியா என்பது ஒருவகை மூலிகைத் தாவரமாகும். மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா, காக்காசியா, மேற்கு சைபீரியா, ஆஃப்கானிஸ்தான், தென்மேற்கு இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளில் இதைக் களையாகக் கருதப்படுகிறது. இங்கு வடகிழக்குப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பரவியிருக்கிறது. உள்ளூர் பெயர்: ஆரா கூரா / சிக்லின்டகுரா / முடுகு தாமரா (தெலுங்கு), சீனப் பூண்டு (தமிழ்), சார் பட்டி(ஹிந்தி), சுசுனி ஷாக் (பெங்காளி) சோப்பாட்டியா (பஞ்சாபி) -
சஜிட்டாரியா குவாயனென்சிஸ்
விவரிப்பு: சஜிட்டாரியா குவாயனென்சிஸ் என்பது ஒரு நீர்த்தாவரமாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டலச் செடியாகும். மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் (செனகலிலிருந்து காமரூன் வரை), தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா (ஆப்கானிஸ்தான் முதல் தாய்வான் மற்றும் இந்தோனேசியாவரை) மற்றும் சூடான் மற்றும் மடகாஸ்கரிலும் காணப்படுகிறது. 1969-ல் லூசியானாவில் இருப்பதாகத் தெரிவிக்கப்படும்வரை அமெரிக்காவில் இருந்ததாக அறியப்படவில்லை. உள்ளூர் பெயர்: எர்ரா அடுகு (தெலுங்கு), பான் பட்டா (ஹிந்தி, பஞ்சாபி), பூ கோரை (தமிழ்) சன்ட்மலா காஷ் / பான் பட்டா காஷ் (பெங்காளி) -
ஸ்பெனோகிளியா ஜிலானிகா
விவரிப்பு: ஸ்பெனோகிளியா ஜிலானிகா என்பது தெற்கு வடஅமெரிக்கா உட்பட இள வெப்ப மற்றும் வெப்பமண்டலத்தின் ஈரமான பகுதிகளில் பரவியிருக்கிறது. ஆனால், பழைய உலகின் (ஆசியா, அப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா) வெப்பமண்டலப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஸ்பெனோகிளியா என்பது ஸ்பெனோகிளியாசே எனும் தாவரக் குடும்பத்தின் ஒரே இனமாகும். உள்ளூர் பெயர்: மிர்ச் பூட்டி (ஹிந்தி) -
சைப்பெருஸ் டிஃபார்மிஸ்
விவரிப்பு: சைப்பெருஸ் டிஃபார்மிஸ் என்பது ஒரு நீர்வாழ் மற்றும் ஈரமான இடங்களில் வாழும் செடியாகும். இது நெல்வயல்களில் காணப்படும் களையாகும். ஆனால், பிரச்சனையான ஒரு செடியல்ல. மெல்லிய மிருதுவான நிமிர்ந்த தண்டுகளுடன் வருடாந்திரம் வளரும் செடியாகும். இதன் அதிகபட்ச உயரம் 30 சென்டிமீட்டர். இதன் பூங்கொத்து குவியலாக ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் அகலத்தில் 120 பூங்கிளைகள்வரை இருக்கும். ஒவ்வொன்றும் நீண்ட மற்றும் ஓரளவு அல்லது முழுமையாக 30 பூவடிச்செதில் மலர்களால் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் பெயர்: ஜெக்கு (கன்னடம்), கண்டலா / கைவர்டகமுஸ்டே (தெலுங்கு),மஞ்சள் கோரை / பூ கோரை (தமிழ்), மோத்தா / லாவ்ஹலா (மராத்தி), சட்ரி வாலா மோத்தா (ஹிந்தி), சத்ரி வாலா முர்க் (பஞ்சாபி),ஜொல் பெஹூவா (பெங்காளி) -
சைப்பெருஸ் ஐரியா
விவரிப்பு: சைப்பெருஸ் ஐரியா என்பது உலகெங்கும் காணப்படும் ஒரு மென்மையான, குஞ்சமான கோரைப்புல். இதன் வேர்கள் மஞ்சள்-சிவப்பு நிறத்திலும், சல்லிவேர் கொண்டதாகவும் இருக்கும். இந்தச் செடி நெல் வயல்களில்தான் பெரும்பாலும் வளர்கிறது. இங்கு இது களையாகக் கருதப்படுகிறது. இந்த ரைஸ் ஃபிளாட் கோரை என்பது ஒரு நேராக வளரும், திரளாக வளராத, வருடாந்திரச் செடி. வேர்க்கிழங்கை உருவாக்குவதில்லை. உள்ளூர் பெயர்: ஜெக்கு (கன்னடம்), துங்கா-முஸ்தலு / துங்கமுஸ்டே (தெலுங்கு),மஞ்சள் கோரை / குச்சிமுலிகம் (தமிழ்), மோத்தா /லாவ்ஹலா (மராத்தி), பானி வாலா மோத்தா(ஹிந்தி), முர்க் (பஞ்சாபி), போரோ சுச்சா(பெங்காளி) -
ஃபிம்பிரிஸ்டைலிஸ் மிலியாசியா
விவரிப்பு: ஃபிம்பிரிஸ்டைலிஸ் மிலியாசியா இந்த பேரினச் செடி பொதுவாக ஃபிம்பிரி, ஃபிம்பிரிஸ்டைல், அல்லது ஃபிரிஞ்ச்-ரஷ் என அறியப்படுகிறது. வெப்பமண்டல ஆசிய கடற்கரைப் பகுதிகளில் தோன்றி பெரும்பாலான கண்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட செடியாகப் பரவியிருக்கலாம். சில பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும் களையாக உள்ளது. சில சமயங்களில் நெல் வயல்களில் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கலாம். உள்ளூர் பெயர்: மணிக்கோரை (தமிழ்), லாவ்ஹலா (மராத்தி), ஹூய் / திலி (ஹிந்தி), கூரியா காஸ் (பெங்காளி) -
ஸ்கிரிபுஸ் ஜூன்காய்டஸ்
விவரிப்பு: ஸ்கிரிபுஸ் ஜூன்காய்டஸ் ஏறக்குறைய உலகெங்கும் உள்ளது. ஆப்பிரிக்காவைத் தவிர எல்லா கண்டங்களிலும் காணப்படுகிறது. ஈர நிலங்களில் பல இனங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆறுகளின் கரைகளிலும், கடலோர டெல்டாக்களிலும், குளங்களிலும் குடைவுக்குழிகளிலும் நெருக்கமாகக் காணப்படுகின்றன. வெள்ளப்பெருக்கு இது பரவுவதைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணியாக இருந்தாலும், வறட்சி, ஐஸ் அரிப்பு, மேய்ச்சல், தீ மற்றும் உப்புத்தன்மை இதன் பெருக்கத்தைப் பாதிக்கின்றன. நீடித்த வெள்ளப்பெருக்கு, அல்லது வறட்சி, விதைகள் புதைவது போன்ற இணக்கமற்றச் சூழ்நிலைகளைத் தாங்கக் கூடியது உள்ளூர் பெயர்: குன்தாதுங்கா காட்டி (தெலுங்கு),குச்சிமுலிகம் (தமிழ்), கேஷூரா (பெங்காளி) மோத்தா / லாவ்ஹாலா (மராத்தி), பியாசி (ஹிந்தி), பியாஜி (பஞ்சாபி) -
ஸ்கிரிபுஸ் ராய்லேய்
விவரிப்பு: ஸகிரிபுஸ் ராய்லேய் என்பது ஒரு மெல்லிய கோரைப்புல், சுமார் 30 செமீ நீளம் கொண்ட தண்டுகளைக் கொண்டது. மவுரிதானியா முதல் வட நைஜீரியாவரை, மற்றும் சாட், காங்கோ, அங்கோலா, கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தைியாவில் ஆழமற்ற தண்ணீர் மற்றும் சேறுமிக்க புல்வெளிகளில் வளருகிறது. கென்யாவில் இது நெல் வயல்கள் மற்றும் பாசன நிலங்களின் களை என அறியப்படுகிறது. உள்ளூர் பெயர்: குன்தாதுங்கா காட்டி (தெலுங்கு),குச்சிமுலிகம் (தமிழ்), கேஷூர் (பெங்காளி) மோத்தா / லாவ்ஹாலா (மராத்தி), பியாசி (ஹிந்தி), பியாஜி (பஞ்சாபி)
Prior to choosing a firm which offers inexpensive essays available, be sure to check its reputation. Trustworthy companies only employ experts in your field. Many academics enjoy write my essay today writing as part-time work. Even famous scientists may write essays for the cost of. These people not only have all the necessary qualifications, but they also have are experienced. Therefore, you’ll be at ease knowing that the material that you purchase will be excellent quality.