Weed-identification Fusiflex Soyabean & Groundnut Tamil – Weed Management
Your address will show here +12 34 56 78




உங்களுடைய களைப் பயிர்களைக் கண்டு பிடியுங்கள் !



  • ஏலுரோபஸ் வில்லோசுஸ்

    ஏலுரோபஸ் வில்லோசுஸ்

    விவரிப்பு: ஏலுரோபஸ் வில்லோசுஸ் என்பது புல் குடும்பத்தில் உள்ள ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க இனமாகும். முக்கியமாக உவர் மண்ணிலும் தரிசு நிலத்திலும் காணப்படுகிறது. வட ஆப்பிரிக்காவிலும், கிழக்கு மத்தியத் தரைக்கடல் வட்டாரத்திலும், மத்திய கிழக்கிலும், அரேபிய தீவகத்திலும், ஆசியாவில் கிழக்குப் பகுதியிலும் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவரை காணப்படுகிறது. உள்ளூர் பெயர்: காரியு (குஜராத்தி), டோலா கவட் (மராத்தி), கட்டல் அருகம்புல் (தமிழ்), புவ்வு கட்டி (தெலுங்கு), நோனா துர்பா (பெங்காளி)
  • பிரகியாரியா ரெப்டன்ஸ்

    பிரகியாரியா ரெப்டன்ஸ்

    விவரிப்பு: பிரகியாரியா ரெப்டன்ஸ் என்பது ஒரு சிறு வருடாந்திர மூலிகைச்செடியாகும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தெற்கு ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் பல்வேறு தீவுகளில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் இச்செடி வளர்கிறது. இது ஒரு பல்லாண்டுப் புல்வகை அல்லது வருடாந்திரப் புல்வகையாகும். பொதுவாக அதிகமாக கிளைவிட்டு, தரையில் படர்ந்து, நுனிநிமிர்ந்து, கணுக்களில் வேர்விட்டு வளரக்கூடியது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தச் செடி மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய துணைக்கண்டம், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ற்றும் பசிபிக் தீவுகளின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சென்றடைந்திருக்கிறது. உள்ளூர் பெயர்: போரே ஹூல்லு (கன்னடம்), நண்டுக்கால் புல் (தமிழ்), நடின் (பஞ்சாபி), வாக்நாகி (மராத்தி),கல்லியு (குஜராத்தி), கிரெப் காஸ் / பாரா காஸ் (ஹிந்தி), பாரா காஸ் (பெங்காளி), எடுருவாகுலா காடி (தெலுங்கு)
  • குளோரிஸ் பார்பட்டா

    குளோரிஸ் பார்பட்டா

    விவரிப்பு: குளோரிஸ் பார்பட்டா என்பது ஒரு குஞ்சம் போன்ற, நிமிர்ந்த, வருடாந்திர அல்லது குறுகிய காலம் வாழும் புல்வகை. இது 0.3-1.0 மீட்டர் அல்லது அதற்கு மேல் வளரக்கூடியது, பெரும்பாலும் சுணையற்ற, குறுகிய வாழ்நாள் கொண்ட ஆண்டு முழுவதும் நுனி வளர்ந்து பூக்கக்கூடியது. நிமிர்ந்த மற்றும் கிளை பிரியும் தண்டுகள் சில சமயங்களில் அடியில் வளைந்திருக்கும். பொதுவாக மென்மையாகவும் தட்டையாகவும் இருக்கும். அடியில் அவை செம்பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், எளிமையானதாக அல்லது கிளையுடையதாக இருக்கும், 3-5 கணுக்கள் இருக்கலாம், கீழ் கணுக்களில் வேர்விடலாம். உள்ளூர் பெயர்: சேவரகு (கன்னடம்), செவ்வரகுப்புல் (தமிழ்), உப்பு காட்டி /ஜடகுஞ்சுலா காட்டி (தெலுங்கு), கோன்ட்வெல் (மராத்தி), மூஞ்ச் டாரி /ஏர்போர்ட் கிராஸ் (ஹிந்தி)
  • டாக்டிலோக்டீனியம்  ஈஜிப்டியம்

    டாக்டிலோக்டீனியம் ஈஜிப்டியம்

    விவரிப்பு: டாக்டிலோக்டீனியம் ஈஜிப்டியம் என்பது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஆனால் உலகளாவிய அளவில் பரவியிருக்கும் பொவேசி குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். ஈரமான இடங்களில் அடர் மண்ணில்தான் இந்தச் செடி பெரும்பாலும் வளர்கிறது. இது ஒரு மெல்லியது முதல் ஓரளவு உறுதியான ஆண்டுதோறும் வளரும் செடியாகும். வயர் போன்ற தண்டு உண்டு அது வளையும். அதன் கீழ் கணுக்களில் வேர் விட்டு வளரக்கூடியது. உள்ளூர் பெயர்: கொனானா டேல் ஹூல்லு (கன்னடம்), நட்சத்திர காடி / கணுகா காடி (தெலுங்கு), காக்காக்கல் புல் (தமிழ்), ஹர்கீம் (மராத்தி), மாக்டா (பஞ்சாபி), மாக்டா / சவாய் (ஹிந்தி), சொக்காடியு (குஜராத்தி), மாகோர் ஜெய்ல் (பெங்காளி)
  • டிஜிட்டாரியா  சாங்குனாலிஸ்

    டிஜிட்டாரியா சாங்குனாலிஸ்

    விவரிப்பு: டிஜிட்டாரியா சாங்குனாலிஸ் என்பது உலகெங்கும் ஒரு பொதுவான களையாக நன்கு அறியப்படும் டிஜிட்டாரியா இனத்தைச் சேர்ந்த புல்செடியாகும். இது ஒரு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது, இதன் விதைகள் உண்ணத்தக்கவை, ஜெர்மனியில் குறிப்பாக போலந்தில் சாகுபடியும் செய்யப்படுகிறது ஒரு தானியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே இது போலந்து தினை என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் பெயர்: ஹோம்பலே ஹூல்லு (கன்னடம்), அரிசிப் புல் (தமிழ்), , தோக்காரி (பெங்காளி) வாக்நாகி (மராத்தி), பர்ஷ் காஸ் / சின்யாரி (ஹிந்தி), நடின் (பஞ்சாபி), ஆரோடரோ(குஜராத்தி), சிப்பாரா கட்டி (தெலுங்கு)
  • டினெப்ரா அராபிகா:

    டினெப்ரா அராபிகா:

    விவரிப்பு: டினெப்ரா அராபிக்கா என்பது ஒரு தளர்வாக குஞ்சமான வருடாந்திர புல் வகையாகும். தண்டு ஈரமான மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் அல்லது செனகல் மற்றும் நைஜீரியாவின் உலர்ந்த இடங்களில் ஒரு மீட்டர் வரை இருக்கும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கில் எகிப்து மற்றும் ஈராக் முதல் இந்தியாவரை இது பரவியிருக்கிறது. எல்லா வட்டாரங்களிலும் சாகுபடி நிலங்களில் இது ஒரு பொதுவான களையாக உள்ளது. உள்ளூர் பெயர்: நாரி பாலடா ஹூல்லு (கன்னடம்), கொங்கா நக்கா / குண்டா நக்கா காட்டி (தெலுங்கு), இஞ்சிப் புல் (தமிழ்), லோன்யா (மராத்தி), காரயு (ஹிந்தி), நடின் (பஞ்சாபி), காரயு (குஜராத்தி), ஜல் கெத்தி (பெங்காளி)
  • எச்சினோக்ளோவா  கொலோனா :

    எச்சினோக்ளோவா கொலோனா :

    விவரிப்பு: எச்சினோக்ளோவா கொலோனா என்பது ஒரு வருடாந்திரப் புல். பல கோடைகாலப் பயிர்களிலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் காய்கறிப் பயிர்களிலும் இதுதான் உலகின் மிக அபாயகரமான களையாக அறியப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில், இது 1814-ல் கியூபாவில் முதலில் வெளியிடப்பட்டது. வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தப் புல்வகை தோன்றியிருக்கிறது. உள்ளூர் பெயர்: காடு ஹரக்கா (கன்னடம்), ஒத்தகட்டி / டோங்கா வாரி (தெலுங்கு), சாமோ (குஜராத்தி), குதிரைவாளி (தமிழ்), பக்கார்ட் (மராத்தி), சமக் / சவன் (ஹிந்தி), ஸ்வங்கி (பஞ்சாபி), பஹாரி ஷாமா / கெட்டி ஷாமா (பெங்காளி)
  • எச்சினோக்ளோவா கிரஸ்  கல்லி

    எச்சினோக்ளோவா கிரஸ் கல்லி

    விவரிப்பு: வெப்பமண்டல ஆசியாவில் தோன்றிய இந்த எச்சினோக்ளோவா கிரஸ் கல்லி முன்னர் ஒருவகை பானிக்கம் புல் எனவகைப்படுத்தப்பட்டது. இதன் மேம்பட்ட உயிரியல் மற்றும் மிகச்சிறந்த சூழ்நிலைத் தகவமைப்பு காரணமாக உலகிலேயே மிகவும் கொடுமையான களையாகக் கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் இது பரவி, எண்ணிலடங்கா பயிர்ச் செயல்முறைகளைத் தாக்குகிறது. உள்ளூர் பெயர்: சிம்பாகனா ஹூல்லு (கன்னடம்), பெட்டா விண்டு (தெலுங்கு), கவட் (மராத்தி), நெல்மராட்டிi (தமிழ்), சமக் (ஹிந்தி), சாமோ (குஜராத்தி), ஸ்வங்க் (பஞ்சாபி), சவா / ஸ்வங்க் (ஹிந்தி), டேஷி ஷாமா (பெங்காளி),
  • எலியூசின் இன்டிகா

    எலியூசின் இன்டிகா

    விவரிப்பு: எலியூசின் இன்டிகா எனப்படும் இந்திய வாத்துப் புல், முற்றப்-புல், வாத்துப் புல், வயர் புல் அல்லது காக்கைக்கால் புல் என்பது பொவாசியே குடும்பப் புல்லில் ஒன்று. இது ஒரு சிறிய வருடாந்திரம் புல், உலகின் வெப்பமான பகுதிகள் முழுவதும் அதாவது 50 டிகிரி அட்சரேகைப் பகுதிகளில் பரவியிருக்கிறது சில பகுதிகளில் இது ஒரு படையெடுப்பெடுக்கும் இனமாக உள்ளது. உள்ளூர் பெயர்: ஹக்கி காலினா ஹூல்லு (கன்னடம்), திப்பா ராகி (தெலுங்கு, தமிழ்), ரன்னசானி (மராத்தி), சொக்காலியு (குஜராத்தி), கோடோ (ஹிந்தி), பின்னா சாலா / சப்ரா காஸ்(பெங்காளி)
  • இராகுரோடிஸ்  டெனெல்லா

    இராகுரோடிஸ் டெனெல்லா

    விவரிப்பு: இராகுரோடிஸ் டெனெல்லா என்பது பொதுவாக 50 செமி உயரத்திற்கு மேல் போகாத பல்வேறு அளவில் உள்ள ஒரு சிறு நெருக்கமாக குஞ்சம்போல் உள்ள வருடாந்திர புல்லாகும். இந்த மென்மையான கற்றையான வருடாந்திர புல் தரிசுப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும், சாகுபடி செய்யும் நிலங்களிலும் செனகலிலிருந்து மேற்கு காமரூன் வரையும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா முழுவதும் வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படுகிறது. உள்ளூர் பெயர்: சின்ன கரிக்கா கட்டி (தெலுங்கு), சிமான் சரா (மராத்தி), கபுதார் தானா, சிடியா தானா (ஹிந்தி), பூம்ஷி (குஜராத்தி), சாடா ஃபுல்கா (பெங்காளி) , கபுதார் தானா (பஞ்சாபி)
  • ரோட்போலியா கொச்சின்சினென்சிஸ்

    ரோட்போலியா கொச்சின்சினென்சிஸ்

    விவரிப்பு: ரோட்போலியா கொச்சின்சினென்சிஸ் என்பது அயல்தேச, வெப்பமான பருவகால, வருடாந்திர புல் வகையாகும். 1920- களில் மியாமி, ஃபுளோரிடாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு கேடு விளைவிக்கும் களை. இது ஒரு மிக அதிகமாக தூர்க்கட்டும் புல்லாகும். வரிசைப் பயிர்கள், மேய்ச்சல்கள் மற்றும் சாலையோரங்களில் இது மிக வேகமாகப் பரவக்கூடியது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வெப்பமான வானிலையுள்ள நாடுகளில் இந்தப் புல் பரவியுள்ளது. ஈரமான புரைவுள்ள நயமான மண்ணில் நன்கு வளர்கிறது. உள்ளூர் பெயர்: முல்லு சாஜி (கன்னடம்), கொண்டா பூனுகு (தெலுங்கு), சுணைப்புல் (தமிழ்), பாரு (ஹிந்தி), ஃபாக் காஸ் (பெங்காளி)
  • அகாலிபா இன்டிகா

    அகாலிபா இன்டிகா

    விவரிப்பு: அகாலிபா இன்டிகா என்பது ஒரு வருடாந்திர குறுஞ்செடியாகும். தொங்கு மஞ்சரி போன்ற பூங்கொத்து மிகச்சிறிய மலர்களைச் சுற்றி கப் போன்ற செதில்களுடன் இருக்கும். உள்நாட்டு பூனைகளுக்கு இதன் வேர் மிகக் கவர்ச்சிகரமாக இருப்பதாகவும், பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்காகவும் பிரதானமாக அறியப்படுகிறது. வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதும் இது பரவியுள்ளது. உள்ளூர் பெயர்: குப்பி கிடா (கன்னடம்), குப்பிசெட்டு முரிபிண்டி ஆக்கு (தெலுங்கு), குப்பைமேனி (தமிழ்) / குப்பி (மராத்தி), புல்கியா (குஜராத்தி), புல்கியா (ஹிந்தி), முக்டா ஜூரி / ஸ்வாட் பசன்டா (பெங்காளி)
  • அகாலிபா சிலியாடா

    அகாலிபா சிலியாடா

    விவரிப்பு: அகாலிபா சிலியாடா என்பது ஒரு நேரான, அரிதாக கிளைவிடும், வருடாந்திர மூலிகையாகும். சுமார் 85 செமீ வரை வளரக்கூடியது. உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துவதற்காக உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக இதன் இலைகள் சிலசமயங்களில் அறுவடை செய்யப்படுகின்றன. இதன் உணவுப்பயன்பாடு குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. பிரதானமாக வயதானவர்களும், உணவுப் பற்றாக்குறை காலத்திலும் இதைச் சாப்பிடுகிறார்கள். உள்ளூர் பெயர்: குப்பி கிடா (கன்னடம்), குப்பிசெட்டு (தெலுங்கு), குப்பைமேனி (தமிழ்) / குப்பி (மராத்தி), புல்கியா (குஜராத்தி), புல்கியா (ஹிந்தி), முக்டா ஜூரி / ஸ்வாட் பசன்டா (பெங்காளி)
  • ஆல்டர்நந்தேரா  செசிலிஸ்

    ஆல்டர்நந்தேரா செசிலிஸ்

    விவரிப்பு: ஆல்டர்நந்தேரா செசிலிஸ் பல பொதுப் பெயர்களால் அறியப்படுகிறது, காம்பற்ற களிப்பு- களை மற்றும் குட்டை காப்பர்லீஃப் போன்ற பெயர்களும் உண்டு. குறிப்பாக இலங்கையிலும் சில ஆசிய நாடுகளிலும் இதை ஒரு காய்கறியாகப் பயன்படுத்துகிறார்கள். பழைய உலகின் மிதவெப்பமண்டலங்களிலும் வெப்பமண்டலங்களிலும் இந்தச் செடி வளர்கிறது. தெற்கு அமெரிக்காவில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தென் மெரிக்காவில் இதன் தோற்றம் உறுதியற்றதாக உள்ளது. உள்ளூர் பெயர்: ஹொன்னா கானி சோப்பு (கன்னடம்), பொன்னகன்டி ஆகு (தெலுங்கு), முல் பொன்னாங்கன்னி (தமிழ்), ரெஷிம்காட்டா (மராத்தி), குடை சாக் (ஹிந்தி), பானி வாலி பட்டி (பஞ்சாபி), புலுயு (குஜராத்தி), மலஞ்சா சாக் (பெங்காளி)
  • செலோசியா  அர்ஜென்டியா

    செலோசியா அர்ஜென்டியா

    விவரிப்பு: செலோசியா அர்ஜென்டியா என்பது ஒரு நிமிர்ந்த, சுணையற்ற வருடாந்திரப் புல்லாகும். இதன் இலைகள் நேரானதாக அல்லது ஈட்டிவடிவமானதாக இருக்கும். பூ பொதுவாக வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு ஈட்டிவடிவம் கொண்டதாக இருக்கும். இந்தச் செடிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வளருபவை என்பதால், நல்ல சூரிய ஒளியில் நன்கு வளருகின்றன. நீர் தேங்காத இடங்களில் வளரக்கூடியவை. இதன் மலர்கள் 8 வாரங்கள்வரை காயாமல் இருக்கும், இறந்த மலர்களை அகற்றுவதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்கலாம். உள்ளூர் பெயர்: குக்கா (கன்னடம்), கொடிகுட்டுவாகு / குனுகு (தெலுங்கு), சஃபெட் முர்க் (ஹிந்தி), பண்ணைக் கீரை (தமிழ்), குருடு / கோம்ப்டா (மராத்தி), லம்பாடு (குஜராத்தி), மோரோக் ஜூட்டி (பெங்காளி)
  • கிளியோம் ஜினன்ட்ரா

    கிளியோம் ஜினன்ட்ரா

    விவரிப்பு: கிளியோம் ஜினன்ட்ரா என்பது பச்சைக் காய்கறியாகப் பயன்படுத்தப்படும் கிளியோம் வகையைச் சேர்ந்த செடியாகும். ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு வருடாந்திர காட்டு மலராகும். ஆனால், உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவியிருக்கிறது இது ஒரு நிமிர்ந்த கிளைவிடும் செடியாகும். இதன் ஆங்காங்கிருக்கும் இலைகள் ஒவ்வொன்றும் 3-5 நீள்வட்ட வடிவ சிற்றிலைகளைக் கொண்டிருக்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். உள்ளூர் பெயர்: திலோனி (கன்னடம்), வோமின்டா / தெல்லா வாமிட்டா / வெலக்குரா (தெலுங்கு), நெய்வாழை (தமிழ்), பந்தாரி டில்வான் (மராத்தி), ஹூர் ஹூர் (ஹிந்தி), டில்வானி / டில்மானி (குஜராத்தி), ஸ்வெட் ஹட்ஹூடு (பெங்காளி)
  • கிளியோம்  ஹேஸ்லெரியானா

    கிளியோம் ஹேஸ்லெரியானா

    விவரிப்பு: கிளியோம் ஹேஸ்லெரியானா என்பது தெற்கு தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒருவகை மலரும் தாவரமாகும். அர்ஜென்டினா, பராகுவோ, உருகுவே மற்றும் தென்கிழக்கு பிரேசிலில் அதிகம் காணப்படுகிறது. பங்களாதேஷ் பகுதிகள் உட்பட தெற்கு ஆசியாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுவாக வெப்பமண்டலத்தில் வருடாந்திரம் பயிரிடப்படுகிறது. இதன் மலர்கள் இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை. உள்ளூர் பெயர்: திலோனி (கன்னடம்), வோமின்டா / தெல்லா வாமிட்டா / வெலக்குரா (தெலுங்கு), நெய்வாழை (தமிழ்), குலாபி டில்வான் (மராத்தி), ஹூர் ஹூர் (ஹிந்தி), டில்வானி / டில்மானி (குஜராத்தி), ஹட்ஹூடு (பெங்காளி)
  • கிளியோம் விஸ்கோசா

    கிளியோம் விஸ்கோசா

    விவரிப்பு: கிளியோம் விஸ்கோசா பொதுவாக மழைக்காலத்தில் காணப்படுகிறது. தட்டைப் பயறில் அந்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த இதன் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்த இதன் இலைகள் வெளியில் கட்டப்படும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விதைகள் வாய்வு நீக்கியாகவும் புழுக்கொல்லியாகவும் உள்ளது. இதன் மலர்கள் மஞ்சள் நிறம் கொண்டவை. உள்ளூர் பெயர்: நாயி பால (கன்னடம்), குக்கவோமின்டா / குக்க-அவலு (தெலுங்கு), நாய்கடுகு (தமிழ்), பிவாலா டில்வான் (மராத்தி), ஹூர் ஹூர் (ஹிந்தி), டில்வானி / டில்மானி (குஜராத்தி), போன் சார்ஸ் (பெங்காளி)
  • கம்மெலினா  பெங்காலென்சிஸ்

    கம்மெலினா பெங்காலென்சிஸ்

    விவரிப்பு: கம்மெலினா பெங்காலென்சிஸ் என்பது ஒரு பல்லாண்டு செடியாகும். வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைத் தாயமாகக் கொண்டது. அதன் பிறப்பிடப் பரப்பை விட்டு வெளியியல் புதிய வெப்பமண்டலப் பகுதிகள், ஹவாய், மேற்கிந்தியத் தீவுகள், வட அமெரிக்காவின் இருபக்க கடற்கரைகள் உட்பட்ட பல பகுதிகளில் மிகப் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இளவேனில் காலம் முதல் இலையுதிர்க் காலம்வரை இது மலரக்கூடியது, நிலநடுக்கோட்டுப் பகுதிகளை ஒட்டி ஆண்டு முழுவதுமே மலரக்கூடியது. இது பெரும்பாலும் இடையூறுற்ற மண்ணில் வளரும். உள்ளூர் பெர்: ஜிகாலி / ஹிட்டகானி (கன்னடம்), வென்னடவிக்குரா / யன்னட்ரி (தெலுங்கு) கனுவா (பஞ்சாபி), கனங்கொழை (தமிழ்), கெனா (மராத்தி), பொக்கன்டா (குஜராத்தி), பொக்கானா / கன்காவுவா (ஹிந்தி), கெல்லோ காஷ் (பெங்காளி)
  • கம்மெலினா கம்யூனிஸ்

    கம்மெலினா கம்யூனிஸ்

    விவரிப்பு: கம்மெலினா கம்யூனிஸ் என்பது டேஃபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வருடாந்திர மூலிகைத் தாவரமாகும். இதன் மலர்கள் ஒரு நாள் மட்டுமே இருக்கக்கூடியவை என்பதால் இந்தப் பெயர் பெற்றிருக்கிறது. கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வட பகுதிகள் முழுவதுமே இரு பரவியிருக்கிறது. சீனாவில், இந்தச் செடி யாழிகாவோ என அழைக்கப்படுகிறது. உள்ளூர் பெர்: ஜிகாலி / ஹிட்டகானி (கன்னடம்), கேனா (மராத்தி), பொக்கான்டி (குஜராத்தி) பொக்கானி /கன்காவுவா (ஹிந்தி), கனுவா (பஞ்சாபி), கென்சிரா (பெங்காளி)
  • கம்மெலினா டிஃபியூசா

    கம்மெலினா டிஃபியூசா

    விவரிப்பு: கம்மெலினா டிஃபியூசா வசந்தகாலம் முதல் இலையுதிர் காலம்வரை மலரக்கூடியது, கலக்கமான சூழல்களிலும், ஈரமான இடங்களிலும் காடுகளிலும் அதிகம் காணப்படும். சீனாவில், இந்தச் செடியை காய்ச்சல் தணிப்புமருந்தாகவும் சிறுநீர்ப்பெருக்கியாகவும் மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். பெயிண்டுகளுக்கான நீலச் சாயத்தை இதன் மலர்களிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். நியூ கினியாவில் இதை ஒரு உண்ணக்கூடிய செடியாக குறைந்தது ஒரு வெளியீடு சுட்டிக்காட்டுகிறது. உள்ளூர் பெர்: ஹிட்டகானி (கன்னடம்), கேனா (மராத்தி), பொக்கான்டா (குஜராத்தி) பொக்கானி / கன்காவுவா (ஹிந்தி), கனுவா (பஞ்சாபி), தோல்சிரா / மனைனா / கனைனாலா (பெங்காளி)
  • சியானோடிஸ்  ஆக்சிலரீஸ்

    சியானோடிஸ் ஆக்சிலரீஸ்

    விவரிப்பு: சியானோடிஸ் ஆக்சிலரீஸ் என்பது கம்மலினாசியே குடும்பத்தில் உள்ள பல்லாண்டுச் செடி வகையாகும். இந்திய துணைக்கண்டம், தெற்கு சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவைத் தாயமாகக் கொண்டது. மழைக்காலக் காடுகள், அடர்வற்றக் காடுகள், மற்றும் மரங்கள் உள்ள புல்வெளிகளில் வளரக்கூடியது. இந்தியாவில் இதை ஒரு மூலிகையாகவும், பன்றிகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் பெயர்: இகாலி (கன்னடம்), நீர்ப்புல் (தமிழ்), வின்ச்கா (மராத்தி), திவாலியா (ஹிந்தி), நரியேலி பச்சி (குஜராத்தி), ஜோராடான் / உரிடன் (பெங்காளி)
  • கோனிசா Spp

    கோனிசா Spp

    விவரிப்பு: கோனிசா spp என்பது சூரியகாந்திப் பூ குடும்பத்தைச் சேர்ந்தஒரு பூக்கும் தாவரமாகும். உலகம் முழுவதும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளிலும் வடஅமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் குளிர்ச்சியான பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த பேரினத்தின் புதிய உலகச் செடிகள் எரிஜெரோன்-உடன் நெருக்கமாகத் தொடர்புகொண்டுள்ளன. உள்ளூர் பெயர்: பேட் டவானா (மராத்தி), பெட்டாடா டவானா (கன்னடம்)
  • டைகேரா அர்வென்சிஸ்

    டைகேரா அர்வென்சிஸ்

    விவரிப்பு: டைகேரா அர்வென்சிஸ் என்பது எளிமையான அடிப்பகுதியிலிருந்து நேராக வளரும் கிளைகளைக்கொண்ட, சுணையற்ற தண்டுகளையும் கிளைகளையும் கொண்ட அல்லது அரிதாக மென்முடி உள்ள, வெளிரிய முகடுகளைக்கொண்ட செடியாகும். இதன் இலைத்தாள் குறுகலாக நேராக இருக்கலாம், அல்லது அரிதாக சற்று நீள்வட்டமாக, குவிந்ததாக இருக்கலாம். மலர்கள் சுணையற்றவையாக, வெள்ளை உப்பியதாக இளஞ்சிவப்பு முதல் சிவப்பு வரை நிறமுள்ளதாக, பழுக்கும்போது பச்சை வெள்ளையாக மாறக்கூடியவை. உள்ளூர் பெயர்: கொராச்சி பால்யா(கன்னடம்), சென்சல்கூரா (தெலுங்கு), தொய்யாகீரை (தமிழ்), குஞ்சரு (மராத்தி), லஹசுவா / குஞ்சரு (ஹிந்தி), கஞ்சாரோ (குஜராத்தி), லாடா மஹாவிரியா / லாடா மஹூரி (பெங்காளி), லஹாசுவா (பஞ்சாபி)
  • யூபோர்பியா  ஜெனிகுலாடா

    யூபோர்பியா ஜெனிகுலாடா

    விவரிப்பு: யூபோர்பியா ஜெனிகுலாடா என்பது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. ஆனால், இப்போது வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதுமே பரவிக்கிடக்கிறது. பல களைக்கொல்லிகளால் இதைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை என்பதால் உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவியிருக்கிறது. ஒரு அலங்காரச் செடியாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தாய்லாந்திலும் இது களையாக மாறியிருக்கிறது. பருத்தி வயல்களிலும், பிற விவசாயப் பகுதிகளிலும் பரவி விட்டது. உள்ளூர் பெயர்: ஹால் கோரி சோப்பு, (கன்னடம்), நான்பாலா (தெலுங்கு), பாரோ கோர்னி (பெங்காளி), காட்டுரக் கள்ளி (தமிழ்), மோத்தி டூத்தி(மராத்தி), டுதேலி (பஞ்சாபி), பாடி டுதேலி (ஹிந்தி), மோட்டி துதேலி (குஜராத்தி),
  • யூபோர்பியா ஹிர்டா

    யூபோர்பியா ஹிர்டா

    விவரிப்பு: யூபோர்பியா ஹிர்டா என்பது ஒரு வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்த இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு களையாகும். திறந்த புல்வெளிகளிலும்,சாலையோரங்களிலும்,நடைபாதைகளிலும் வளரும் முடிமிக்க செடியாகும். பாரம்பரிய மூலிகை மருந்தாக இது பயன்படுகிறது. இந்தியாவின் வெப்பமான பகுதிகள் முழுவதும் பரவியிருக்கிறது. பெரும்பாலும் சாலையோரங்களில் பயன்பாடற்ற இடங்களில் காணப்படுகிறது. உள்ளூர் பெயர்: ஹால் கோடி பிடி சோப்பு / அக்செடிடா (கன்னடம்), சோட்டி டுதி (மராத்தி), சின்னம்மன் பச்சரிசி (தமிழ்), சோட்டி டுதேலி (ஹிந்தி), நனபலு (தெலுங்கு), டுதேலி (பஞ்சாபி), டுதேலி (குஜராத்தி), பாரோ கோர்னி (பெங்காளி)
  • யூபோர்பியா ஹைப்பரிசிஃபோலியா

    யூபோர்பியா ஹைப்பரிசிஃபோலியா

    விவரிப்பு: யூபோர்பியா ஹைப்பரிசிஃபோலியா என்பது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. ஆனால், இப்போது வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பரவிக்கிடக்கிறது. வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் எப்படிப் பரவியது என்பதில் தெளிவில்லை. ஏனென்றால், யூபோர்பியா இன்டிகா லாம்-உடன் இது குழப்பப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, புரூண்டி மற்றும் மொரீசியசிலும் நிச்சயமாகக் காணப்படுகிறது. உள்ளூர் பெயர்: ஹால் கோடி சோப்பு / (கன்னடம்), டுதி (மராத்தி), சின்னம்மன் பச்சரிசி (தமிழ்), சோட்டி டுதேலி (ஹிந்தி), டுதேலி (பஞ்சாபி), டுதேலி (குஜராத்தி), மனசசி (பெங்காளி)
  • இன்டிகோஃபெரா  கிளான்டுலோசா

    இன்டிகோஃபெரா கிளான்டுலோசா

    விவரிப்பு: இன்டிகோஃபெரா கிளான்டுலோசா என்பது ஃபபாசியே என்ற மிகப்பெரிய பேரினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் 700- க்கும் மேற்பட்ட வகைகளாகப் பரவிக்கிடக்கிறது, ஆனால் மத்தியத்தரைக்கடல் வட்டாரத்தில் காணப்படவில்லை. உள்ளூர் பெயர்: பரகடம் / பாரபட்டலு (தமிழ், தெலுங்கு), போர்புடி / பர்கடன் (மராத்தி)
  • பார்த்தீனியம்  ஹிஸ்டரோபோரஸ்

    பார்த்தீனியம் ஹிஸ்டரோபோரஸ்

    விவரிப்பு: பார்த்தீனியம் ஹிஸ்டரோபோரஸ் என்பது சாலையோரங்கள் உட்பட்ட குழப்பமுற்ற இடங்களில் பரவிவிடுகிறது. மேய்ச்சல் நிலங்களையும் பண்ணை நிலங்களையும் ஆக்கிரமித்து, விளைச்சலுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கிறது, இதனால் இது பஞ்சக் களை என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில் ஒரு மாசாக இது முதலில் ஆக்கிரமித்தது. இந்தச் செடி விளைச்சலையும், மேய்ச்சல் செடிகளையும் பாதிக்கும் நச்சு இரசாயனத்தை வெளிவிடுகிறது. இதன் ஒவ்வாப்பொருள் மனிதர்களையும் விலங்குகளையும்கூடப் பாதிக்கிறது. உள்ளூர் பெயர்: காங்கிரஸ் (கன்னடம்), வய்யாரிபமா (தெலுங்கு), விஷப்பூண்டு (தமிழ்) கஜார் கவட் (மராத்தி), கஜார் காஸ் (பெங்காளி), கஜார் காஸ் (ஹிந்தி), காங்கிரஸ் காஸ் (பஞ்சாபி), காங்கிரஸ் காஸ் (குஜராத்தி)
  • பிலாந்துஸ் நிரூரி

    பிலாந்துஸ் நிரூரி

    விவரிப்பு: பிலாந்துஸ் நிரூரி என்பது வெப்பமண்டலப் பகுதி முழுவதும் பரவியிருக்கும் ஒரு செடியாகும். கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது, கேல் ஆஃப் தி விண்ட், ஸ்டோன்பிரேக்கர் அல்லது சீடு அன்டர் லீஃப் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஸ்பர்ஜஸோடு தொடர்புடையது, பிலாந்தசியே குடும்பத்தின் பிலாந்துஸ் பேரினத்தைச் சேர்ந்தது. உள்ளூர் பெயர்: நெல்லி கிடா (கன்னடம்), நிலாவ்சிரி (தெலுங்கு), கீழாநெல்லி (தமிழ்), புய்யாவலி (மராத்தி), ஹஜர்தானா (ஹிந்தி, பஞ்சாபி), பாய் அமலி (குஜராத்தி), வுல் அம்லா (பெங்காளி)
  • பிலாந்துஸ் மடராஸ்பட்டென்சிஸ்

    பிலாந்துஸ் மடராஸ்பட்டென்சிஸ்

    விவரிப்பு: பிலாந்துஸ் மடராஸ்பட்டென்சிஸ் என்பது ஒரு நிமிர்ந்து வளரும், கிளையற்றது முதல் அதிக கிளைவிடுவதுவரை உள்ள, வருடாந்திர முதல் பல்லாண்டுச் செடியாகும். இதன் தண்டுகள் ஏறக்குறைய மரம்போன்று இருக்கலாம், ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கலாம். மருந்துக்காக காட்டிலிருந்து இந்தச் செடி எடுக்கப்படுகிறது. உள்ளூர்ச் சந்தைகளில் விற்கப்படுகிறது, மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்காக வர்த்தகரீதியாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்ளூர் பெயர்: ஆடு நெல்லி ஹூல்லு (கன்னடம்), நிலாவ்சிரி (தெலுங்கு), மேலாநெல்லி (தமிழ்), புய்யாவலி (மராத்தி), படா ஹசர்தானா / ஹஜர்மனி (ஹிந்தி), பாய் அமலி (குஜராத்தி), ஹாஜர் மோனி (பெங்காளி), டேன் வாலி புட்டி (பஞ்சாபி)
  • போர்ட்டுலாகா  ஒலிராசியா

    போர்ட்டுலாகா ஒலிராசியா

    விவரிப்பு: போர்ட்டுலாகா ஒலிராசியாவிற்கு மிருதுவான, சிவந்த, பெரும்பாலும் தரையில் வளரும் தண்டுகளும் இலைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் ஒன்றுவிட்டதாக அல்லது எதிர்எதிரான அமைப்பில் இருக்கும், தண்டு இணைப்புகளிலும் நுனிகளிலும் குவிந்திருக்கும். இதன் ஒற்றை மலர் சூரிய ஒளிமிக்க காலையில் சில மணி நேரம் மட்டுமே இலைக் கொத்தின் மத்தியில் இருக்கும் இது முதலில் அமெரிக்காவில் 1672-ல் மசக்குசெட்சில் காணப்பட்டது. உள்ளூர் பெயர்: சன்னா கோலி சோப்பு (கன்னடம்), பப்பு குரா / பிச்சி மிராபா (தெலுங்கு), பருப்புக் கீரை (தமிழ்), கோல் (மராத்தி), சோட்டி சன்ட் (ஹிந்தி), சாந்தி (பஞ்சாபி), லூனி (குஜராத்தி), நுனியா சாக் (பெங்காளி)
  • டிரையாந்திமா  மோனோகைனா

    டிரையாந்திமா மோனோகைனா

    விவரிப்பு: இந்தப் பேரினத்தைச் சேர்ந்த செடிகள் வருடாந்திரச் செடிகள் அல்லது பல்லாண்டுத் தாவரங்களாகும். பொதுவாக, சதைமிக்க, எதிரெதிராக உள்ள, சமமற்ற இலைகள் உண்டு. நெடுஞ்சாண்கிடையான வளர்கிறது ஐந்து பூவிதழ்கள் இரு ஜோடி பூவடிச்செதில்களால் தாங்கப்படுகின்றன. இதன் பழம் இறக்கை மூடி கொண்டவை. இவை பொதுவாக ஹார்ஸ் பர்ஸ்லேன்ஸ் என அழைக்கப்படுகின்றன. உள்ளூர் பெயர்: டொடகோல் பால்யா (கன்னடம்), ஷவலை / சரணை (தமிழ்), காப்ரா / விஷ்கப்ரா (மராத்தி), சட்டோடோ (குஜராத்தி), கடபானி(பெங்காளி), பிஷ்கப்டா / பட்தெர்செட்டா (ஹிந்தி, பஞ்சாபி)
  • டிரையாந்திமா போர்ட்டுலாகாஸ்ட்ரம்

    டிரையாந்திமா போர்ட்டுலாகாஸ்ட்ரம்

    விவரிப்பு: டிரையாந்திமா போர்ட்டுலாகாஸ்ட்ரம் என்பது ஐஸ் பிளான்ட் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். டெசர்ட் ஹார்ஸ் பர்ஸ்லேன், பிளாக் பிக்வீடு மற்றும் ஜயன்ட் பிக்வீடு போன்ற பொதுப் பெயர்களால் அறியப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் வட மற்றும் தென் அமெரிக்கா உட்பட்ட பல கண்டங்களிலும் பரவியிருக்கிறது. இன்னும் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட செடியாக உள்ளது. உள்ளூர் பெயர்: டொட கோலி சோப்பு (கன்னடம்), சரணை (தமிழ்), நீருபாய்லகு காப்ரா / அம்படிமாடு (தெலுங்கு), பந்தரி கெட்டுலி (மராத்தி), சட்டோடோ (குஜராத்தி), புனர்நபா சாக் / ஷ்வெட் புனர்நவா(பெங்காளி), பிஷ்கப்டா / பட்தெர்செட்டா (ஹிந்தி, பஞ்சாபி)
  • டிரைடாக்ஸ்  புரோக்கும்பென்ஸ்

    டிரைடாக்ஸ் புரோக்கும்பென்ஸ்

    விவரிப்பு: டிரைடாக்ஸ் புரோக்கும்பென்ஸ் என்பது டெய்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். மிகப் பரவலாக இருக்கும் களையென்றும், பூச்சி செடி என்றும் நன்கு அறியப்படுகிறது. வெப்பமண்டல அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது, ஆனால், உலகெங்கும் வெப்பமண்டல, மிதவெப்பமண்டல மற்றும் மிக மிதவெப்பமண்டல வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது ஒரு கொடுங் களையாகப் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, ஒன்பது மாகாணங்களில் தீங்குயிரி நிலையைப் பெற்றிருக்கிறது. உள்ளூர் பெயர்: பிஷால்ய காரணி / டிரைதரா (பெங்காளி), கான்ஃபுலி / பரஹ்மசி (ஹிந்தி), வெட்டுக்காயப் பூண்டு (தமிழ்), ஏக்தந்தி (மராத்தி, குஜராத்தி), வட்வட்டி (கன்னடம்)
  • சைப்பெருஸ்  ரொட்டுன்டஸ்

    சைப்பெருஸ் ரொட்டுன்டஸ்

    விவரிப்பு: சைப்பெருஸ் ரொட்டுன்டஸ் என்பது ஒரு பல்லாண்டுச் செடியாகும். 140 செமீவரை உயரமாகவளரக்கூடியது. “கொட்டை புல்” மற்றும் “நட் செட்ஜ்” போன்ற பெயர்கள் சைப்பெருஸ் ரொட்டுன்டஸ் இனத்துடன் தொடர்புடையவை. அதன் கிழங்கு கொட்டையை ஒத்திருப்பதால் பெயர் பெற்றிருக்கிறது. ஆனால், அவை கொட்டைகளல்ல. உள்ளூர் பெயர்: ஜெக்கு (கன்னடம்), பட்ரா-துங்கா- முஸ்தே / பட்ரமுஸ்தா / கண்டலா (தெலுங்கு), கேரை கிழங்கு (தமிழ்), மோத்தா / டில்லா (ஹிந்தி), நாகர்மோத்தா / லாவ்ஹலா (மராத்தி), கந்த் வாலா முர்க் (பஞ்சாபி), சித்தோ (குஜராத்தி), வாட்லா காஸ் / சட்டா பேத்தி முத்தா (பெங்காளி)

COMING SOON