ரிஃபிட் எக்ஸ்ட்ரா ஒரு முன்னதான, பரவலான களைக் கொல்லியாகும். இது முன்னதாகக் களைக்கட்டுப்பாடு மற்றும் விரிவான களைக்கட்டுப்பாடு தேவைப்படும் நெல்லை நடவு செய்து பயிர் செய்யும் விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இரண்டு செயல்புரியும் உட்பொருட்களைக் கொண்ட ரிஃபிட்" எக்ஸ்ட்ரா இரட்டை செயல்முறையை வழங்குகிறது. ஸ்பிளாஷ் தொழில்நுட்பம் மூலமாக பயன்படுத்த எளிதானது. மேம்பட்ட பயிர் பாதுகாப்பு வழங்கி நெல் வயலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
ரிஃபிட் எக்ஸ்ட்ராவின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
இரட்டைச் செயல்முறை
இரண்டு வெவ்வேறு செயல்முறை (VLCFA & ALS) ஆற்றலுடன் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது
பரவல் வகை களைக்கொல்லி
விரிவான களைக்கட்டுப்பாடு முக்கிய புற்கள், அகன்ற இலைக்களைகள் மற்றும் கோரைப் புற்களிலிருந்து விடுதலை அளிக்கிறது
சிறந்தப் பயிர் பாதுகாப்பு
நடவு செய்த நாற்றுக்களுக்குப் பாதுகாப்பானது. பயிர் அழுத்தம் இல்லாமல் வளர உதவுகிறது
களைகள் தோன்றுவதற்கு முன்பாகவே பயன்படுத்துதல்
முன்னதாக மற்றும் ஆற்றலுடன் களைகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமான களை மற்றும் பயிரிடையே ஏற்படும் போட்டியைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு முன்னதாக சிறந்த பயிர் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது
எளிதாகப் பயன்படுத்துவதற்கான ஸ்பிளாஷ் தொழில்நுட்பம்
வேலையாட்கள் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பம் மற்றும் பயன்படுத்த எளிதானது
இலக்குக் களைகள்
All
புற் களைகள்
அகன்ற இலைக் களைகள்
கோரைப் புற்கள்
எகினோகுளோவா எஸ்பிபி
மோனோகோரியா வகினாலிஸ்
லுட்விஜியா பர்விஃப்ளோரா
அம்மானியா பாக்சிஃபெரா
எக்லிப்டா ஆல்பா
சைபரஸ் இரியா
சைபரஸ் டிஃபார்மிஸ்
பயன்படுத்துவதற்கான அணுகூலமான வழிகாட்டுதல்கள்
பயன்படுத்தும் நேரம்
நடவு செய்த பின் 0-3 நாட்களில் பயன்படுத்துவது சிறப்பானது
தண்ணீர் பாய்ச்சுதல்
பயன்படுத்தும்போது வயலில் 4-5 செமீ தண்ணீர் இருப்பதை உறுதி செய்யவும்
பயன்படுத்திய பின்பு பராமரிப்பு
நீடித்தக் களைக் கட்டுப்பாட்டிற்கு முறையாகத் தண்ணீர் பாய்ச்சவும்